அனுர பண்டாரநாயக்கவை பின்பற்றுமாறு சபாநாயகரை வலியுறுத்திய நீதியமைச்சர்
அரசியலமைப்பு பேரவைக்கு எதிராக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவை, நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் சபாநாயகர் உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapakshe) இன்று(12.07.2024) நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை விடுத்தார்.
பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு
அரசியலமைப்பு பேரவை மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு விடயத்தில் நாடாளுமன்றம் பலவீனமாக இருப்பதால், அது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நீதித்துறையை விட சட்டமன்றம்(நாடாளுமன்றம்)தான் உச்சமானது என்று கூறிய வரலாற்றுத் தீர்ப்பை வழங்கிய தனது முன்னோடியான அனுர பண்டாரநாயக்காவை, நடப்பு சபாநாயகர் பின்பற்ற வேண்டும் என்றும் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam