நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட நீதியமைச்சரின் மனு
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் (Wijeydasa Rajapaksha) மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து அவருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் (Colombo High Court) தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
எனினும், இந்த உத்தரவின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்து நீதியமைச்சர் தாக்கல் செய்த மனுவே இன்று (07.05.2024) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பதில் தலைவர்
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) எதிராக ஏற்கனவே முன்னாள் தலைவர் சந்திரிகா குமாரதுங்க (Chandrika Kumaratunga) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அவர் தலைவராக செயற்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையில், சந்திரிகா தலைமையில் கூடிய கட்சியின் அரசியல் குழு, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை (Nimal Sripala De Silva) பதில் தலைவராக நியமித்தது.
தடையுத்தரவு
இதனையடுத்து, மைத்திரிபாலவின் தலைமையிலான குழுவினர் கூடி விஜயதாச ராஜபக்சவை பதில் தலைவராக தெரிவு செய்திருந்தனர்.
இந்த தெரிவுக்கு எதிராகவே மனு ஒன்றின் அடிப்படையில் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |