நீதிபதி சரவணராஜா விவகாரத்திற்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்(Photos)

Jaffna SL Protest
By Theepan Oct 06, 2023 07:12 AM GMT
Report

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம்(06.10.2023) இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு சட்டவாட்சியை பாதுகாக்க நீதித்துறைச் சுதந்திரத்தை உறுதி செய்ய வலியுறுத்தி போராட்டக்காரர்கள் பதாகைகளை தாங்கி நின்றனர்.

நீதிபதி சரவணராஜா விவகாரத்திற்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்(Photos) | Justice For Judge Saravanaraja Case Protest Jaffna

நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் அரசாங்கம்

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணிகள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், சிவில் சமூகத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கொழும்பில் காலையில் நடந்த துயரம் : ஐவர் பரிதாபமாக பலி - CCTV காணொளி வெளியானது

கொழும்பில் காலையில் நடந்த துயரம் : ஐவர் பரிதாபமாக பலி - CCTV காணொளி வெளியானது

யாழ் குரு முதல்வர் கருத்து

இதேவேளை நீதித்துறைக்கு எதிராக விடப்பட்ட சவாலாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம். என இலங்கை திருச்சபையின் யாழ் குரு முதல்வர் செல்வன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நீதித்துறைக்கு எதிராக அச்சுறுத்தல் விடப்பட்டிருக்கிறது இந்த அச்சுறுத்தலை நாங்கள் நிராகரிக்க வேண்டும், அதனை நாங்கள் எதிர்க்க வேண்டும் அப்போதுதான் ஜனநாயகத்தோடு வாழலாம்.

நீதிபதி சரவணராஜா விவகாரத்திற்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்(Photos) | Justice For Judge Saravanaraja Case Protest Jaffna

இலங்கையிலே நீதித்துறையிலே இப்படிப்பட்ட அச்சுறுத்தல் வந்தது இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம் இதேபோன்று எங்களுடைய வாழ்க்கையில் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்.

அரசியல்வாதிகள் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், சமூக ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள், சாதாரண மக்கள் கூட நீதி நியாயம் கதைத்தால் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் இந்த சூழ்நிலையில் தான் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம்.

கொழும்பு சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம்: 70 பேரின் உயிரை காப்பாற்றிய பயணி

கொழும்பு சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம்: 70 பேரின் உயிரை காப்பாற்றிய பயணி


எங்களுக்கு தெரியும் நாடாளுமன்றத்தில் இப்போது சட்டமூலங்கள் வருகின்றன பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அத்தோடு நிகழ்நிலை காப்பு சட்டம் மூலம் இவையெல்லாம் ஊடகத்துறையை கட்டி போடவும், உண்மை நீதி வெளியில் வராமல் இருக்கத்தான் இவையெல்லாம் செய்யப்படுகின்றன, இவற்றையெல்லாம் பார்த்து நாங்கள் அமைதியாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை, ஆகவே நாங்கள் வடக்கு கிழக்கு கடந்து முழு இலங்கையாக நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும்.

மூன்றாவது துயர சம்பவம்! பாடசாலை பேருந்து விபத்து: 15 மாணவர்கள் வைத்தியசாலையில்

மூன்றாவது துயர சம்பவம்! பாடசாலை பேருந்து விபத்து: 15 மாணவர்கள் வைத்தியசாலையில்


நீதித்துறைக்கு விடுத்த சவாலை நிராகரிக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தின் அடிப்படையில் வாழலாம், சர்வாதிகாரம் வருவதை நாங்கள் அனுமதிக்க முடியாது, எல்லோரும் இணைந்து இந்த போராட்டங்களை முன்னெடுக்க நான் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US