ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளரை சந்தித்த ஜூலி சங்: இலங்கை தொடர்பில் பேச்சு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக ஜூலி சங், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் தகாஃபுமி கடோனோவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்றைய தினம் (25.07.2023) இடம்பெற்றுள்ளதாக ஜூலி சங் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின்போது இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான ஆதரவை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க வேண்டும் என்றும் கூறியதாக ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
I met with Takafumi Kadono, the new Country Director for Sri Lanka at the Asian Development Bank & discussed ADB’s support for Sri Lankans while the country enacts reforms aimed at creating a stronger, more inclusive and resilient economy in #lka. pic.twitter.com/Kye47uRsGP
— Ambassador Julie Chung (@USAmbSL) July 25, 2023