ஜனாதிபதியின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்: பிரபல நீச்சல் வீரர் ஜூலியன் பொலிங்கிடம் விசாரணை
நீச்சல் வீரர் ஜூலியன் பொலிங் மற்றும் தொழிலதிபர் ஜொனாதன் மார்டென்ஸ்டைன் ஆகியோர் ஜூலை 9ஆம் திகதி நடந்த போராட்டம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான எதிர்கால விசாரணைகளுக்காக, வாக்குமூலங்களைப் பதிவுசெய்வதற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜூலியன் பொலிங்
ஜூலியன் பொலிங் ஒரு இலங்கையில் பதக்கம் வென்ற நீச்சல் வீரர் ஆவார், அவர் சர்வதேச போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
அவர் 1984 முதல் 1991 வரையிலான தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்காக 15 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
மேலும் மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
தொழிலதிபர் ஜொனாதன் மார்டென்ஸ்டின், 1996 ஆம் ஆண்டு காணாமல் போன இலங்கை கடற்படையின் மறைந்த தளபதி செட்ரிக் மார்டென்ஸ்டினின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் பாரிய போராட்டம்! அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு |