இலங்கையில் புலம்பெயர் அலுவலகம் ஒன்றை அமைக்க திட்டம் - ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
புலம்பெயர் மக்களின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கையில் புலம்பெயர் அலுவலகமொன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வெற்றியடைய அனைத்து தரப்பினரின் ஆதரவும் அவசியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற "அறிஞர்களின் சங்கம் - 2022" விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும்
இதேவேளை, தற்போதைய அவசரகாலச் சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன, முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, அறிஞர்கள் சங்கத்தின் தலைவர் துலித பெரேரா, பொதுச் செயலாளர் உபாலி ஜயவர்தன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri