புதிய வரி விதிப்பு தொடர்பில் கேள்வி எழுப்பும் நீதிபதிகள்
அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரிவிதிப்பு தொடர்பில் இது சரியா என நீதிபதிகள் நீதியரசர்களிடம் கேட்கும் நிலை உருவாகியுள்ளதாக முன்னாள் நீதியரசர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இன்று(03.11.2022) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய வரி விதிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் அரசாங்கம் புதிய வரி விதிப்பு தொடர்பில் அறிவிப்பை விடுத்துள்ளது. புதிய வரி விதிப்பால் மக்கள் இடர்களை எதிர்நோக்குகிறார்கள் என தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நீதிபதிகள் தமக்கும் இந்த வரி விதிப்பால் பாதிப்பு ஏற்படுமோ என நினைத்து நீதியரசர்களிடம் இது சரியா என கேட்கிறார்கள்.
நீதியரசர்கள் குறித்த வழக்குத் தொடர்பில் விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் தீர்ப்பு தொடர்பில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அரசியலில் ஒற்றுமை வேண்டும்
அரசாங்கம் மக்களின் உள்ளூர் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக வரி விதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
மக்கள் இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து செலவுகளை எவ்வாறு குறைக்கலாம் என
சிந்தித்து செயற்பட வேண்டும்.
ஆகவே தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு அரசியலில் ஒற்றுமையும் சமூகத்தில்
பகிர்ந்து கொள்ளுதலும் அவசியம்.”என கூறியுள்ளார்.