ட்ரம்பின் உத்தரவை தடுத்து அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி யூ எஸ் எயிட் (USAID) பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கும் உத்தரவிற்கு நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.
யுஎஸ்எயிட் அல்லது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் சுமார் 2000 பணியாளர்களை சம்பளத்துடனான விடுமுறையில் அனுப்பும் தீர்மானத்தை இடைநிறுத்தி உள்ளது.
வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர்
நீதிபதி கார்ல் நிக்கோலோஸ் இந்த இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்துள்ளார். தொழிற்சங்கங்களினால் தொடுக்கப்பட்ட மனு ஒன்றின் அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்று உத்தரவினை நீதிபதி இடைநிறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் முதல் யுஎஸ்ஏ பணியாளர்கள் பலர் சம்பளத்துடனான விடுமுறையில் செல்ல நிர்பந்திக்கப்பட்டிருந்தனர்.
அமெரிக்காவின் பிரதான வெளிநாட்டு அபிவிருத்தி நிறுவனமாக இந்த யுஎஸ்டியிட் நிறுவனம் இயங்கி வருகின்றது.
இந்த நிறுவனத்தில் சுமார் 10,000 பணியாளர்கள் பணியாற்றி வருவதுடன் இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
500 பணியாளர்களுக்கு விடுமுறை
அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனம் பயனுடைய சேவைகளை வழங்கவில்லை என ட்ரம்ப் வாதிட்டு வருகின்றார்.
ஏற்கனவே இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 500 பணியாளர்கள் விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சில நிறைவேற்று உத்தரவுகளை நீதிமன்றங்கள் தடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 17 மணி நேரம் முன்

அடிக்கடி வரும் உடல்நலப் பிரச்சனை, டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam

நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

இந்தியன் வங்கியின் IND Super 400 நாட்கள் FD திட்டத்தில் ரூ.4,44,444 முதலீடு செய்தால்.., எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
