வவுனியாவில் தீ வைக்கப்பட்ட 300 கிலோ கஞ்சா: நீதிபதி இளஞ்செழியன் நடவடிக்கை
வவுனியா மேல் நீதிமன்ற உத்தரவின் கீழ் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று (24.01.2024) நீதிபதி இளஞ்செழியன் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றுள்ளது.
சுகாதார நடைமுறை
கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் முடிவுறுத்தபட்ட 12 வழக்குகளில் முன்வைக்கப்பட்ட 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேற்பார்வையின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், நீதிமன்ற பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு மக்கள் நடமாட்டம் மற்றும் அருகே வீடுகள் அற்ற பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கஞ்சா எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
