மாந்தையை வந்தடைந்த மடுத் திருத்தலத்தை நோக்கிய பயணம்
மன்னார் மருத மடு அன்னையின் ஆவணி திருவிழாவினை முன்னிட்டு இன மத பேதமின்றி மடு திருத்தலம் நோக்கிய பக்தர்களின் நடைபயணம் மாந்தை கிழக்கு நட்டாங்கண்டலை வந்தடைந்துள்ளது.
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு யாழ்.வடமராட்சி கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மருதமடு அன்னையின் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
தேவையான உணவு தங்குமிட வசதி
இவ்வாறு பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள பக்தர்களே முல்லைத்தீவு மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் மற்றும் பாண்டியன்குளம் ஆகிய பகுதிகளை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வந்தடைந்த பக்தர்களுக்கு தேவையான உணவு, தங்குமிட வசதி மற்றும் இதர வசதிகளை மேற்படி கிராம மக்கள் வழங்கி வருகின்றனர்.
நேற்று காலை நட்டங்கண்டல் பகுதியில் இருந்து பாலாம்பிட்டி வரைக்குமான சுமார் 35 கிலோமீட்டர் நீளமான அடர் காட்டுப் பாதை வழியாக பாலம்பிட்டி நோக்கி பயணித்து அங்கிருந்து நாளை மடுத்திருத்தலத்தை சென்றடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
