டித்வா வீட்டுத்திட்டக் கலந்துரையாடலில் வெடித்த சர்ச்சை - ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்
கிளிநொச்சி மாவட்டச் செயலத்தில் இடம்பெற்ற டித்வா வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் பொழுது அங்கிருந்த ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்த கூட்டமானது, இன்று(24.11.2026) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், குறித்த கூட்டத்தில், அமைச்சர் சுசில் ரணசிங்கவும் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வீடு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றமை கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கடந்த இரு மாதங்களாக வீடு திட்டத்துக்கான நிதி நிறுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் வீட்டுத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் காரணங்கள் குறிப்பிடாமல் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டதாக எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.