ராஜீவ் காந்தி தாக்கப்பட்டதை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர் காலமானார் (video)
புகைப்பட செய்தியாளர் -சேன விதானகம
மூத்த புகைப்பட ஊடகவியலாளர் சேன விதானகம தனது 76 ஆவது வயதில் இன்று புதன்கிழமை காலமானார்.
1987 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு கொழும்பில் வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பின்போது, அவரை கடற்படை வீரர் ஒருவர், துப்பாக்கியால் தாக்கிய போது எடுத்த புகைப்படத்திற்காக மறைந்த சேன விதானகம மிகவும் பிரபலமானார்.
இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிர்ப்பை காட்டும் வகையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

மாத்தறையில் பிறந்தார்
1945 ஆம் ஆண்டு மாத்தறையில் பிறந்த, சேன விகனகமவின் புகைப்படங்கள் உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியில் பரவலாக பிரசித்தம் பெற்றவையாகும்.
பல தசாப்தங்களாக, அவர் லேக் ஹவுஸுடன் பணிபுரிந்தார். அத்துடன் ஏஎப்பி புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றினார்.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam