பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் நான்கரை மணி நேரம் விசாரிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்
பத்திரிகையொன்றில் 2020ஆம் ஆண்டு வெளியான செய்திகள் மற்றும் ஒளிப்படம் தொடர்பாக குறித்த பத்திரிகை செய்தி ஆசிரியரிடம் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நேற்று (01.11.2023) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி குறித்த பத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் தொடர்பான செய்தியும், ஒளிப்படமும் வெளியாகியிருந்தது.
வழக்குத் தாக்கல்
அது தொடர்பாகவும், அன்றைய தினம் வெளியாகியிருந்த தமிழ்த் தேசியக் கட்சி மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்திருந்த செய்தி தொடர்பாகவுமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

குறித்த பத்திரிகை செய்தி ஆசிரியர் கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு நேற்று அழைக்கப்பட்டு காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்தநாள் செய்தி மற்றும் ஒளிப்படம் தொடர்பில் குறித்த பத்திரிகைக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan