ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! சாந்தன் - கருணா இரகசிய டீல் : மனம் திறந்த நேரடிச்சாட்சி
கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து ஒரு தொகை போராளிகளுடன் இருந்து பிரிந்தது ஒரு பெரிய பிளவு எனவும் அதைத்தாண்டி அதிலிருந்து பெரும் சரிவாக வடக்கு கிழக்கு என பிளவை ஏற்படுத்தியமை விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்லாது ழுமு வரலாற்றிற்குமே பாதகத்தை ஏற்பபடுத்தியது என சிரேஸ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்த குழுவில் கஜன் மாமா என்பவர் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டவர் என்றும் பின்னர் அவரை அணுகி தகவல்களை பெற முயன்ற போது அவர் நஞ்சு ஊட்டப்பட்டு கொல்லப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜோசப் பரராஜசிங்கத்தை நேரடியாக சுட்டுக் கொன்ற சாந்தன் ஈபிஆர்எல்எவ் இனை சேர்ந்தவர்.
இந்நிலையில், ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தவர்கள் வெறும் 2பேர்தான் கருணாகுழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றையவர்கள் ஏனைய குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கயில்...