இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Ranil Wickremesinghe Dr. S. Jaishankar Sri Lanka India
By Steephen 2 மாதங்கள் முன்
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இங்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி மகத்தான வரவேற்பளித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியை உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த ஜெய்சங்கர்

இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! | Joint Program Between Sri Lanka And India 

மேற்படி உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கொழும்பு, பெஜட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடயங்களுடன், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! | Joint Program Between Sri Lanka And India

இக்கலந்துரையாடலில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அதற்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கப்பெற்றது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் ஆட்சி ஆரம்பிக்கப்பட்ட 1991ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள அதே பொருளாதார நெருக்கடியை இந்தியாவுக்கு சந்திக்க நேரிட்ட போது இந்திய அரசாங்கம் தம்மிடமிருந்த தங்கக் கையிருப்புக்களை அடகு வைத்து அந்நெருக்கடிக்கு தீர்வு கண்டதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர்ந்தார்.

இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! | Joint Program Between Sri Lanka And India

இதனடிப்படையில், இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள நிலைமையை இந்தியா நன்கு புரிந்துகொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் ஜெயசங்கர், இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்திய அரசாங்கம் அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

புதிய ஒப்பந்தம் கைச்சாத்து

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவிகார அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது புதிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட்டப்பட்டதுடன் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இணையவழியூடாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! | Joint Program Between Sri Lanka And India

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட உயர் பெறுபேற்றைக் கொண்ட சமூக அபிவிருத்தித் திட்டங்களின் (HICDP- High Impact Community Development Project ) வரையறைகளை நீடிப்பது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தமும் இங்கு கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில், இலங்கை தரப்பில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும், இந்திய தரப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கைச்சாத்திட்டனர்.

இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! | Joint Program Between Sri Lanka And India

இந்த ஒப்பந்தம் இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வழிகாட்டுகிறது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக மேம்பாட்டு வேலைத் திட்டங்களுடன் தொடர்புடைய இந்த ஒப்பந்தம் 2005 ஆம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! | Joint Program Between Sri Lanka And India

அதன்படி தனிநபர் வேலைதிட்டத்தின் வரையறை 300 மில்லியன் இலங்கை ரூபாவாக இருந்தது. எனினும் அது இன்று கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 600 மில்லியன் இலங்கை ரூபாவாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி 2017 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, இந்திய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களால் இலங்கைக்கு வழங்கும் பரிசாக கண்டிய நடத்துக்கான பயிற்சி நிறுவனமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் வைத்தார்.

இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! | Joint Program Between Sri Lanka And India

கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகை வளாகத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி கல்வி நிறுவனத்தை இச்சந்தர்ப்பத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இணையவழியூடாக திறந்து வைத்தார்.

மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இந்நாட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியில் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 300 வீடுகளைக் (காலி, கண்டி, நுவரெலியா- தலா 100 வீடுகள் வீதம்) கையளிக்கும் நிகழ்வும் இந்திய வெளிவிவகார அமைச்சரினால் இணையவழி தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! | Joint Program Between Sri Lanka And India

60 ஆயிரம் வீடுகளில் 50 வீடுகளின் நிர்மாணப்பணிகள் பூர்த்தி

60,000 வீடுகளைக் கொண்ட இந்த வேலைதிட்டத்தில் 50,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. பெருந்தோட்டத்தைச் சேர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4000 வீடுகளில் மூன்றாம் கட்டச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அதேநேரம் பணிகள் பூர்த்தியாகியுள்ள 3300 வீடுகள் ஏற்கனவே பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! | Joint Program Between Sri Lanka And India

மேலும் இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘மாதிரி கிராம வீட்டுத் திட்டம்’ மூலம் அநுராதபுரம் மற்றும் பதுளை மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் அடையாள நிகழ்வும் இச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! | Joint Program Between Sri Lanka And India

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, புத்தசாசனம், சமயம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, புத்தசாசனம், சமயம் மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Harrow, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, Neuss, Germany

23 Mar, 2023
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கந்தர்மடம்

27 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

28 Feb, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, கல்முனை

29 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Bobigny, France

09 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநகர், Toronto, Canada

29 Mar, 2013
மரண அறிவித்தல்

சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன்

28 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோப்பாய் மத்தி, Jaffna

09 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Ajax, Canada

26 Mar, 2023
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

25 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், யாழ்ப்பாணம், Niederglatt, Switzerland, சூரிச், Switzerland

27 Mar, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Alliston, Canada

18 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு, பம்பலப்பிட்டி

28 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு, சுவிஸ், Switzerland, கொழும்பு

28 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரசாலை, கொழும்பு, London, United Kingdom

22 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

23 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

24 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, Markham, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, பாவற்குளம், Montreal, Canada

21 Mar, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா

27 Mar, 2013
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, East Ham, United Kingdom

23 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
அகாலமரணம்

ஜெயந்திநகர், பிரான்ஸ், France

20 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கண்டி, மட்டக்களப்பு, கொழும்பு, Greenford, United Kingdom

04 Apr, 2022
மரண அறிவித்தல்

நவாலி, பிரான்ஸ், France

23 Mar, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US