சுரேஷ் சலே கைதுக்குக் கூட்டு எதிரணி கடும் கண்டனம்: ஒரு இலட்சம் கையொப்பம் திரட்டும் போராட்டம் ஆரம்பம்!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்குக் கூட்டு எதிரணி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், ஒரு இலட்சம் கையொப்பங்களைத் திரட்டும் மக்கள் மனுப் போராட்டம் நேற்று(14.03.2026) மஹரகமவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மஹரகம நகர சபையின் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணி அரசியல் பிரமுகர்கள் மற்றும் மகா சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என இதன்போது உரையாற்றிய அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டைப் பாதுகாத்த புலனாய்வு அதிகாரிகளை இலக்கு வைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam