லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிக்கை!
தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடைய செல்வாக்கு மிக்க நபர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்து, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மெத்தனமான போக்கைக் கடைப்பிடித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்கவிற்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
லஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவர் டபிள்யூ.எம்.என்.பி. இத்தவெலவிற்கு இது தொடர்பிலான கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜி. எல். பீரிஸ் உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் இக்கடிதத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட பல புகார்கள் மீது ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்படுகிறதா என்ற கடுமையான கவலையையும் கேள்வியையும் எழுப்பியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான பின்னணி, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தொடர்பான முறைப்பாடுகள், முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள், நிலக்கரி இறக்குமதியுடன் தொடர்புடைய முறைகேடுகள் குறித்த விசாரணைகளின் தற்போதைய நிலைப்பாடு போன்ற விவகாரங்கள் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்புடைய நபர்களுக்கு எதிராக எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட பல முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, இந்த விவகாரங்கள் தொடர்பான மேலதிக விபரங்களை நேரடியாகச் சமர்ப்பிப்பதற்காக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரைச் சந்திப்பதற்கான அனுமதியை கூட்டு எதிர்க்கட்சி கோரியுள்ளது.
தாங்கள் எழுப்பியுள்ள கரிசனைகள் குறித்து ஆணைக்குழு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri