யாழ்ப்பாணக் கலாச்சார மத்திய நிலைய திறப்பு விழா (Video)
யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலைய திறப்பு நிகழ்வு தற்போது சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ். பொது நூலகத்தின் அருகில் இந்த கலாச்சார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த கலாச்சார மத்திய நிலையம் குறித்து அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 1.6 பில்லியன் ரூபா இந்திய நிதியுதவியின் கீழ் 2016ஆம் ஆண்டு இதற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
மேலும் கலாச்சார மத்திய நிலையத்திற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த போதும் திறப்பு நிகழ்வு தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் குறித்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.