கிண்ணியாவில் நடந்தது விபத்தல்ல! அது கொலை - இலங்கை நாடாளுமன்றத்தில் சீற்றம்
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று இடம்பெற்ற சம்பவம், ஒரு கொலை சம்பவமாகவே கருதப்படுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
குறித்த படகு சேவைக்கு நகர சபையே அனுமதியளித்துள்ளது. எனினும் படகு பயணத்தின் போது உயிர் காப்பு அங்கிகள் எடுத்துச் செல்லப்படவில்லை. இதன் காரணமாகவே உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து தவறிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமென தாம் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு இன்று காலை கவிழ்ந்த போது அதில் பயணித்த ஆறு பேர் பலியாகினர். சம்பவத்தின் போது படகில் 20 பேர் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
