மின்சாரத்தை துண்டித்து அதிகாரத்தைப் பெற முயற்சிக்காதீர்கள்! ஜோன்ஸ்டன் பெர்னான்டோ
மின்சாரத்தை துண்டித்து அதிகாரத்தை பெற முயற்சிக்காதீர்கள் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பல் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிவாயு பிரச்சினைக்கு பின்னால் யாரோ இருப்பதாக சொன்னேன். அப்போது நிறைய பேர் என்னை விமர்சித்தார்கள்.
இப்போது எரிவாயு வெடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? முகநூலில் உள்ள அனைத்து ஜே.வி.பிகாரர்களும் என்னைக் குற்றம் சாட்டத் தொடங்கினர்.
கெட்ட வார்த்தையில் அவர்கள் என்னை ஏசினார்கள். முகநூல் ஊடாக ஜேவிபியின் ஒழுக்கத்தை நீங்கள் நன்றாகக் கவனிக்கலாம்.
மின்சாரத்திலும் இதேபோன்ற பிரச்சினை உள்ளது. மாதக்கணக்கில் மூடப்படுகிறது. இந்த மின் நெருக்கடிக்குப் பின்னால் ஏதோ இருக்கிறது என்பதை மக்கள் உணரவில்லையா?
இதன் பின்னணியில் சதி உள்ளது. ஜனாதிபதியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த இடமளிப்பதில்லை. இந்த விடயங்களுக்குப் பின்னால் ஏதோ இருக்கிறது.
எரிவாயு வெடிப்பு விவகாரம் வெளியில் வந்தது போன்று இந்த விடயங்களும் எதிர்காலத்தில் வெளிச்சத்துக்கு வரும்.
நமது ஜனாதிபதி இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகிறார். பொலிஸார் சாமர்த்தியமாக அவற்றையெல்லாம் பறை சாற்றாமல் அம்பலப்படுத்துவர்.
இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என தொழிற்சங்கங்களுக்கு கூறுகின்றோம். இதன் பின்னணியில் முழுமையாக சூழ்ச்சி காணப்படுகிறது.
நாங்கள் தேர்தலை எதிர்கொண்டு மக்களின் விருப்பத்திற்கு இடமளிப்போம். மக்களை கொன்று பிணங்களை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்காதீர்கள்.
மின்சாரத்தை துண்டித்து அதிகாரத்தை பெற முயற்சிக்காதீர்கள். அவை தவறான செயல்களாகும் என குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 9 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri