10 ஆண்டு கால சட்டப் போராட்டத்தை முடிக்க ஜோன்சன் நிறுவனம் ஒப்புதல்
ஜோன்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் உள்ளிட்ட டால்க் தயாரிப்புகளைப் பயன்படுத்தியதால் சினைப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடிக்க, அந்த நிறுவனம் 5.5 பில்லியன் டொலர் (சுமார் ₹46,000 கோடிக்கு மேல்) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இதன் மூலம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இழப்பீட்டுத் தொகை
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாநில மற்றும் கூட்டாட்சி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 76,000 வழக்குகள் தீர்த்து வைக்கப்படும்.

இதில் பங்கேற்கும் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, இழப்பீட்டுத் தொகை 7 பில்லியன் டொலர் அல்லது அதற்கு மேலாகக் கூட உயரக்கூடும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக, J&J நிறுவனம் 2027-இல் $3 பில்லியன் தொகையையும், மீதியை 2028-இல் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இறுதியாவதற்கு 95% மனுதாரர்களின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
சோள மாவு அடிப்படையிலான பவுடர்
அதேவேளையில், தங்களது தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்றும், புற்றுநோயை உண்டாக்கவில்லை என்றும் J&J நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

வழக்கு விசாரணைகளில் தங்களுக்கு வெற்றி பெற நம்பிக்கை இருந்தபோதிலும், நீண்டகால சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்துவதற்காகவே இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக நிறுவனத்தின் சட்டப் பிரிவு துணைத் தலைவர் எரிக் ஹாஸ் தெரிவித்துள்ளார்.
ஜோன்சன் & ஜோன்சன் நிறுவனம் ஏற்கனவே 2020-ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவில் டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் விற்பனையை நிறுத்திவிட்டு, சோள மாவு அடிப்படையிலான பவுடர்களை விற்பனை செய்யத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan