ஈழத்தமிழர் விவகாரத்தில் ஜோ பைடனின் வியூகம் (VIDEO)
அமெரிக்கா மீண்டும் மனித உரிமை அவையில் இணைந்து இலங்கையின் படைத்தளபதி மூவருக்கும் தடை விதித்துள்ளமையானது இலங்கை தமிழர்களின் கட்டமைப்பும் அமெரிக்காவின் கட்டமைப்பும் ஒன்றாக அமைந்துள்ளதன் காரணமாகவே என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் சிங்கள பேரினவாத அரசு என்பது ஒரு இனவாத அரசு. இந்த இனவாத அரசில் தமிழ் மக்களுக்கான எந்தவொரு நீதியையும் பெற முடியாது.
இனவாத அரச கட்டமைப்பில் உருவாக்கப்பட்டதே இந்த இலங்கை அரசு.
இலங்கை அரசாங்கத்திடம் சமஸ்டி என்று எழுதிக்கொடுத்தால் கூட அதனை சிங்கள பேரினவாத பூதம் விழுங்கிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri