வடக்கு மாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட உடனடி வேலை வாய்ப்புக்கள்
வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அரிய வாய்ப்பு ஒன்றை இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணை (Reecha Organic Farm) வழங்குகின்றது.
இதன்மூலம், நாட்டில் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புக்களை தேடி கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு நன்மை கிடைக்கவுள்ளது.
இதற்கமைய, உணவக மேலாளர் (Restaurant manager), விருந்தினர் உறவு அதிகாரி (Guest relations officer), வரவேற்பாளர் (Receptionist), சமையலாளர் (Chef), செஃப் டி பார்ட்டி (Chef de partie), வெயிட்டர் (Waiter), சமையலறை உதவியாளர் (Kitchen Helper) உள்ளிட்ட பல வெற்றிடங்களுக்கு ஆட்கள் உள்ளெடுக்கப்படவுள்ளார்கள்.
உரிய விபரங்கள்
மேலும், குறித்த வேலைவாய்ப்புக்களுக்கான நேர்காணல்கள் ஒவ்வொரு செவ்வாய் முதல் புதன்கிழமைகளில் காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 12.00 வரை இடம்பெறவுள்ளன.

அதேவேளை, இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான தகுதியாக குறித்த துறை தொடர்பான அறிவு மற்றும் அனுபவம் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.
அது மாத்திரமன்றி, சம்பளம் தொடர்பில் நேர்காணலின் போது கலந்துரையாடி தீர்மானித்துக் கொள்ள முடியும்.
மேலும், வேலைவாய்ப்புக்களை பெற விரும்புவோர், hr@reecha.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது சுயவிபர கோவையை (CV) அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற +94779908575, +94707772355 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு றீ(ச்)ஷா தெரவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam