இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு: உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை பணியாளர்களை தொழிலுக்கு அமர்த்துதல் குறித்த இஸ்ரேல் அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் விவசாயத் துறைக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்கு இலங்கை, இஸ்ரேலுடன் உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலில் திட்டவட்டமான தொழிற்சந்தை துறைகளில் உள்ள தற்காலிக தொழில்களில் இலங்கையர்களை ஈடுபடுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என கூறியுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்
இது தொடர்பாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்ரேலில் இலங்கை தொழிலாளர்களுக்கு முதல் தர பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் குணவர்தன உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
