ரூஹுல் ஹக்கின் பணி இடைநீக்கம் நீடிப்பு
சர்ச்சைக்குரிய சட்ட வைத்திய அதிகாரி ஜே.எம்.ஓ.ரூஹுல் ஹக்கின் பணி இடைநீக்கம் நீடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது தொழில்சார் நடத்தை தொடர்பான விசாரணைகள் முடிவுறாத நிலையில், அவரது இடைநீக்கத்தை நீடிக்க இலங்கை மருத்துவ சபை முடிவு செய்துள்ளது.
மருத்துவ சபையின் தீர்மானம்
ரூஹுல் ஹக், 2022 டிசம்பர் 20 முதல் 2023 ஆகஸ்ட் 20 வரை இலங்கை மருத்துவ சபையால் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சமீப காலங்களில் முரண்பாடான பிரேத பரிசோதனை அறிக்கைகளை வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் கீழ், இலங்கை மருத்துவ சபை, அவரின் இடைநிறுத்தத்தை நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுப்பது குறித்து, மருத்துவ சபை சட்ட ஆலோசனையையும் கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |