ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : மேலும் ஒரு சந்தேக நபர் கைது
ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர், கொழும்பு வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார், அதே நேரத்தில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் காயமடைந்து கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முச்சக்கரவண்டி பொலிஸாரால் கைப்பற்றல்
முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

அதன்படி, துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளால் ஹெட்டியாவத்தை பகுதியில் நேற்று பகல் கைது செய்யப்பட்டதுடன், இதன்போது முச்சக்கரவண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 63 வயதுடைய கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் இன்று (30) புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கரையோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri