வடக்கு பிரான்ஸ் பகுதியில் திடீர் குண்டுவெடிப்பு!
வடக்கு பிரான்ஸ் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
வடக்கு பிரான்சின் கடலோர பகுதியில் அமைந்த ஜெர்சி தீவின் தலைநகர் செயிண்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
ஜெர்சி மாகாண தலைமை பொலிஸ் அதிகாரி ராபின் ஸ்மித் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை 20 முதல் 30 பேர் வரை கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தொடரும் மீட்பு பணி
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர் தொடர்ச்சியாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Jersey Channel islands explosion pic.twitter.com/KqEUDtyqTo
— Daniel Hunt (@just_daniel1411) December 10, 2022
குண்டுவெடிப்பின்போது, கட்டிடத்தின் வழியே நடந்து சென்றவர்களில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் குண்டுவெடிப்புக்கான காரணம் எதுவும் தெரியவில்லை எனவும் பொலிஸார் இது பற்றிய விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
