ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஜெஹான் அப்புஹாமி காணாமல் போயுள்ளார்
இரண்டாம் இணைப்பு
காணாமல் போனதாக கூறப்பட்ட ஜெஹான் அப்புஹாமி நீதிமன்றத்தில் சரண்
காணாமல் போனதாக கூறப்பட்ட ஜெஹான் அப்புஹாமி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவர், நீதிமன்றத்தில் சரணடைந்ததை அடுத்து, 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் திலினே கமகே உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜெஹான் அப்புஹாமி, பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றதாக நேற்றைய தினம் வரை அவரை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை பொலிஸார் கூறியிருந்தனர்.
பொலிஸாரின் அறிக்கையை அடுத்து ஜெஹான் அப்புஹாமியின் கடவுச்சீட்டை தடை செய்து இதற்கு முன்னர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முதலாம் இணைப்பு
அனைத்து பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றதாகசந்தேகிக்கப்படும் நடிகர் ஜெஹான் அப்புஹாமி தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை எனவும் நேற்று (21) மதியம் வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் அண்மையில் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து ஜெஹான் அப்புஹாமியின் கடவுச்சீட்டை தடை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட ஜெஹான் ஹப்புஹாமி தப்பியோடினார் -பொலிஸார்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்கடந்த 18 ஆம் திகதி ஒழுங்கு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் குழு ஒன்று ஜெஹான் அப்புஹாமியை கைது செய்ததக பொலிஸார் கூறினர்.
மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் அவரை கைது செய்தனர்.
இதனையடுத்து அவர், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அழைத்து செய்ய தயராக இருந்த பேருந்தில் ஏற்றுவதற்காக மற்றுமொரு பொலிஸ் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் பொலிஸார் பேருந்தை பரிசோதித்த போது ஜெஹான் அப்புஹாமி பேருந்தில் இருக்கவில்லை. பேருந்தில் ஏற்றுவதற்காக ஒப்படைக்கப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர் தப்பிச் சென்றதாக அவர்கள் கூறியிருந்தனர்.
தப்பிச் சென்றரா அல்லது தப்பிச் செல்ல இடமளிக்கப்பட்டதா?
இதன் பின்னர் அவர் தப்பிச் சென்றரா அல்லது தப்பிச் செல்ல இடமளிக்கப்பட்டதா என்பதை அறிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸின் உத்தரவுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
எவ்வாறாயினும் தப்பிச் செல்ல இடமளித்த அதிகாரிகள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜெஹான் அப்புஹாமி பொலிஸாரால் எந்த சந்தர்ப்பத்திலும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸில் இருப்பதாகவும் அறிவிக்கவில்லை எனவும் அவர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி கூறியுள்ளார்.




