இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள ஆசிரியர்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்
இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள STEM ஆசிரியர்களை சந்தித்து நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு, மற்றும் இலங்கை தேசிய கல்வி நிறுவனம் இணைந்து நடாத்தும் பெருந்தோட்டத் துறையின் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டம் "வித்யார்வதன - VIDHYAWARDANA" நேற்றைய தினம்(05) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேர்தல்கள் ஆனைக்குழு தடை
எனினும், இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு, மற்றும் இலங்கை தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றின் ஒழுங்குப்படுத்தலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பங்கேற்றிருக்கவில்லை.
ஜனாதிபதி தேர்தல் காலங்களில் அமைச்சர்கள் பங்குகொள்ளும் நிகழ்வுகளுக்கு தேர்தல்கள் ஆனைக்குழு தடை விதித்துள்ளமையை கருத்திற்கொண்டு, முன்மாதிரியாக செயற்பட்டே இந்நிகழ்வில் அமைச்சர் ஜீவன் கலந்து கொண்டிருக்கவில்லை.
இதனிடையே இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள குறித்த STEM ஆசிரியர்களையும் இன்றைய தினம் (06) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
குறிப்பாக வருகை தந்துள்ள (STEM) ஆசிரியர்களால், பெருந்தோட்ட ஆசிரியர்களின் மேம்பாட்டு திட்டத்தினை கொண்டுவந்தமைக்காக அமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், அமைச்சரின் ஆலோசகர் ஹரித்த விக்ரமசிங்க, பிரத்தியேக செயலாளர் மொகமட் காதர் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
