பாலியாறு நீர் வழங்கல் திட்டத்தை திறந்து வைத்த அமைச்சர் ஜீவன்
மன்னார் (Mannar) - பாலியாறு நீர் வழங்கல் திட்டத்தினை நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வு மல்லாவி, முல்லைத்தீவு ஊடான நீர் வழங்கல் காரியாலயதில் இன்று (15.05.2024) காலை இடம்பெற்றுள்ளது.
பாலியாறு நீர் வழங்கல் திட்டம்
இதன்போது, இந்த திட்டத்திற்கான பெயர் பலகையினை வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் திறை நீக்கம் செய்து வைத்ததுடன் அலுவகத்தினை கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் திறந்து வைத்துள்ளார்.
மேலும், திணைக்கள அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் வெள்ளாங்குளம் பாலியாறு விவசாய தலைவர்கள் விவசாயிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





