கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று காலை பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிராக பிரஜா சக்தி அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழின அழிப்பை நினைவுகூர உணர்வுபூர்வமாக தயாராகும் தாயகம் : முல்லைத்தீவு நகரை நோட்டமிட்ட உலங்கு வானூர்தி
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
இலஞ்சம், ஊழல், வீண்விரயம் ஆகியவற்றுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரத்தை மீள வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தயாரான நிலையில், பொலிஸார் பேனரை அகற்றியதால் பொலிஸாருக்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில முனசிங்கவிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
