தமிழ் பெண்கள் நெற்றியில் திலகமிடுவதனை தடுத்தமை முறையா: கடும் தொனியில் ஜீவன்
பெருந்தோட்டங்களில் பணியில் ஈடுபட்டு வரும் தமிழ் பெண்கள் நெற்றில் சிகப்பு திலகமிடுவதனை தோட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாகவும் அதற்கு எதிராக குரல் கொடுத்ததாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடந்து கொண்ட விதம் தொடர்பில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆக்ரோசமான முறையில் நடந்து கொண்டதாக சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியிடப்பட்டிருந்தன.
அமைச்சர் கருத்து
இந்த காணொளிகள் தொடர்பிலேயே அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படாமையை எதிர்த்து தாம் குரல் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட நிறுவனங்களின் முகாமையாளர்கள் பலவந்தமான அடிப்படையில் பெண் தொழிலாளர்களின் பொட்டுகளை அகற்றுவதாகவும் காதணிகள் அணியக் கூடாது என உத்தரவிடுவதாகவும் இதனை எதிர்த்து தாம் குரல் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தேயிலைக்கு பதிலீடாக சில இடங்களில் கோப்பி செய்கை செய்யப்பட்டதனை எதிர்த்து குரல் எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கம் என்ற வகையில் தாம் இவ்வாறு குரல் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் உரிய பதிலளிக்கப்படவில்லை எனவும் அதனால் இவ்வாறு அதிரடியாக நடந்து கொள்ள நேரிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
5/7
— Jeevan Thondaman (@JeevanThondaman) May 31, 2024
Paying below the legal minimum wage, forcing workers to wipe out their cultural and religious identity and removing their personal jewellery are all examples of the modern day slavery that is being practiced by the plantation industry.
If you look at the websites of these… pic.twitter.com/I8VBopjokF
இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது எக்ஸ் தளத்திலும் பதிவொன்றை இட்டுள்ளார். பெண் ஒருவர் தமக்கு தோட்டத்தில் நேரிடும் அநீதிகள் குறித்து தெளிவுபடுத்தும் காணொளியையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பொட்டு வைக்கக் கூடாது ஆபரணம் அணியக் கூடாது
பொட்டு இடக் கூடாது எனவும் தோடு அணியக் கூடாது எனவும் தோட்ட நிர்வாகம் கூறுவதாகவும் தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையில் தாங்கள் இவ்வாறு திலகம் இட்டு, தோடு அணிந்து செல்வதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
1/7
— Jeevan Thondaman (@JeevanThondaman) May 31, 2024
Yesterday, I had to intervene into an ongoing trade union action by workers at the Point Pedro estate belonging to Kelani Valley Plantations. I intervened as the General Secretary of the Ceylon Workers Congress, the largest trade union representing the plantation workers.… pic.twitter.com/ZTbJd24jGr
தேயிலை தொழிற்சாலையில் இவ்வாறு பொட்டு மற்றும் ஆபரணங்கள் அணியக் கூடாது என தோட்ட நிர்வாகம் உத்தரவிட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களில் ஒரு சில காட்சிகள் மட்டும் காண்பிக்கப்பட்டதாகவும், முகாமைத்துவத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கீறல் கூட விழவில்லை எனவும் நாகரீகமாகவே அவர்கள் நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |