அமெரிக்காவின் கவனம் திரும்பியுள்ள இலங்கையின் முக்கியத் துறை:பதில் தூதுவரின் அறிவிப்பு
இலங்கையின் வலுசக்தி துறையில் நிகழும் நேர்மறையான மாற்றங்கள் குறித்து அமெரிக்காவின் கவனம் திரும்பியுள்ளது.
புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுசக்தி துறை உறவுகளை மேலும் மேம்படுத்த விரும்புவதாகவும் இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் ஜெய்ன் ஹோவெல் (Jayne Howell) அறிவித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் குமார ஜெயக்கொடியுடனான சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இந்த சந்திப்பின் போது, நாட்டில் வலுசக்தி மற்றும் மின்சாரத் துறைகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விரிவாகப் பேசிய எரிசக்தி அமைச்சர், அமெரிக்க முதலீடு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் துறைகள் மற்றும் உருவாகி வரும் புதிய வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
மின்சார மறுசீரமைப்பு திட்டம், எரிப்பொருள் துறையில் நடைபெற்று வரும் மாற்றங்கள் மற்றும் நாட்டிலும் பிராந்தியத்திலும் வலுசக்தி ஸ்திரத்தன்மை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்க தூதரகத்தின் பொருளாதார விவகார அதிகாரி ஜேக்கப் தாமஸ் மற்றும் இலங்கை பெற்றோலிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இன்றைய உலக ஒழுங்கை டொனால்ட் ட்ரம்பால் மாற்ற முடியுமா..! 18 மணி நேரம் முன்
திரிஷாவுடன் விளம்பரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்.. எத்தனை பேர் இந்த வீடியோவை பார்த்திருக்கீங்க.. Cineulagam
ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri