சிவில் பாதுகாப்பு படையினர் தொடர்பில் ஆனந்த விஜயபாலவின் விசேட அறிவிப்பு
சிவில் பாதுகாப்பு படை பிரிவிலுள்ள வீரர்கள் வேறு திணைக்களங்களுக்கு மாற்றப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
சிவில் பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு இன்று (29.01.2026)ஆய்வு விஜயம் மேற் கொண்டிந்த போதே இதனை தெரிவித்தார்.
விடுவிக்கப்படும் வீரர்கள்
சிவில் பாதுகாப்பு படை பிரிவிலுள்ள 5000 வீரர்களை இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் (Department of Wildlife Conservation - DWC) விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறினார்.
பொது பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் நோக்கில் சுமார் 10,000 சிவில் பாதுகாப்பு படை வீரர்களை இலங்கை பொலிஸ் திணைக்களத்திலும் இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

சிவில் பாதுகாப்பு படையின் செயல்திறனை மேம்படுத்த தேவையான வசதிகள், உட்கட்டமைப்பு மேம்பாடு, பயிற்சி திட்டங்கள் மற்றும் மனிதவள மேலாண்மை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.