பதவி நீக்கப்பட்ட வெளியுறவு செயலாளர், முக்கிய நாட்டின் தூதுவராகிறார்
நீக்கப்பட்டவர் இணைக்கப்பட்டார்
வெளியுறவு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜயநாத் கொலம்பகே, ஜப்பானிய தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
இதற்காக அவரது, தனிப்பட்ட பின்னணி அடங்கிய ஆவணம், ஏற்கனவே ஜப்பானிய வெளியுறவு அமைச்சின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அந்த ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர் ஜப்பானிய தூதுவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரணிலின் கருத்து
இந்தநிலையில் ஜப்பானுடன் முறிந்துபோயுள்ள உறவை கட்டியெழுப்பவேண்டியது அவசியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
எனினும் டோக்கியோவின் நம்பிக்கையை பெற சில காலம் எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் கொலம்பகே தூதுவராக நியமிக்கப்பட்டால், அவர் மீதே ரணில் கூறிய பொறுப்புக்கள் சுமத்தப்படும். ஏற்கனவே வெளியுறவு அமைச்சின் செயலாளர் பதவியில் நீடிக்க அவர் முயன்றபோதும் அது பயன் தரவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.





நிலாவிடம் வம்பிழுத்தவர்களை தரமான சம்பவம் செய்த குடும்பத்தினர்.. அய்யனார் துணை தெறிக்கும் எபிசோட் Cineulagam
