இலங்கையின் கொலைக் களங்களில் என்ன நடந்தது ? ஜஸ்மின் சூக்கா
இலங்கையின் கொலைக் களங்களில் இறந்த பல்ஆயிரக்கணக்கானவர்களை நாம் நினைவுகூருகின்றோம், அத்துடன் குறிப்பாக தமது அன்புக்குரியவர்களை இழந்து உயிர்தப்பியவர்கள், மெனிக் பாமிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள் ஆகியோரின் வேதனையையும் துன்பத்தினையும் நாங்கள் ஆழமாக உணர்ந்து கொள்கின்றோம். சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை ஆகியன இந்த முகாம்களில் பொதுவாகவே இடம்பெற்றது என்பதும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களால் இது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது என்பது எமக்கு இப்போது தெரியும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் தலைவர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் மொழிபெயர்ப்பும் இணைக்கப்பட்டுள்ளது:
12 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்காக இந்த செய்தியை அனுப்புமாறு கேட்டுக்கொண்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது உண்மையிலே எனது மனதைத் தொட்டுள்ளது.
எனது சார்பாகவும் ,பிரான்சிஸ் ஹரிசன் மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்திலுள்ள எனது அனைத்து சக பணியாளர்கள் சார்பாகவும் நான் இந்த செய்தியை அனுப்புகின்றேன்.
12 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் சமூகத்துடன் நாம் இணைந்து கொள்கின்றோம்.
இலங்கையின் கொலைக் களங்களில் இறந்த பல்லாயிரக்கணக்கானவர்களை நாம் நினைவுகூருகின்றோம் அத்துடன் குறிப்பாக தமது அன்புக்குரியவர்களை இழந்து உயிர்தப்பியவர்கள், மெனிக் பாமிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள் ஆகியோரின் வேதனையையும் துன்பத்தினையும் நாங்கள் ஆழமாக உணர்ந்து கொள்கின்றோம்.
சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை ஆகியன இந்த முகாம்களில் பொதுவாகவே இடம்பெற்றது என்பதும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களால் இது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது என்பது எமக்கு இப்போது தெரியும்.
நாம் துக்கம் கடைப்பிடிக்கும் அதேவேளையில் தமது அன்புக்குரியவர்களை தொடர்ந்தும் தேடிவரும் அத்துடன் இலங்கைப் பாதுகாப்பு படைகளால் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையினைக் அறிந்து கொள்வதற்காக ஏங்கிக்கிடக்கும் கணாமற்போனவர்களின் தாய்மார்களின் வேண்டுகோளையும் நாம் நினைவிற்கொள்கின்றோம்.
சித்திரவதைளும் மற்றும் அடக்குமுறைகளும் இலங்கையில் தொடர்கின்றன என்பது தொடர்ந்தும் மறுப்பவர்களை அவர்களது இந்த மறுப்பானது எங்கள் அனைவரையும் அவமானப்படுத்துவதாய் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என நாம் அவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றோம்.
இந்த வாரம், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஒரு நினைவுச் சின்னத்தை நிறுவுவதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள், இந்தக் கருங்கல்லில் செய்யப்பட்ட நினைவுக்கல் இரவோடிரவாக காணாமற்போயுள்ளதுடன் 10 வருடகால பழைய நினைத்தூபியும் அழிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நினைவுத்தூபியானது வடக்கு மற்றும் கிழக்கில் 20000 இற்கும் மேலான கல்லறைகளைக் கொண்ட 25 பாரிய மயானங்கள் வேண்டுமென்று மிருகத்தனமாக அழிக்கப்பட்டதன் விளைவாக இந்த நினைவுத்தூபி கட்டப்பட்ட நிலையில் இந்த அழிப்பானது குறிப்பாக பாதிப்பு மிக்கதாக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை தமது அன்புக்குரியவர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கவும் , நினைவு கூருவதற்கும் மறுத்தல் ஒரு குற்றமாகும். அத்துடன் இது இலங்கையிலுள்ள சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்நோக்கியுள்ள அடக்குமுறை நிலைமை காட்டுகின்றது. போர் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்துவிட்டன.
அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற பாரிய சர்வதேசக்குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என அழைப்புவிடுக்கப்பட்டது. இந்த வருடம் மார்ச்சில் 46 ஆவது அமர்வில் மனித உரிமைகள் சபை ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையை மேற்கொண்டது.
உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு தாம் அனுமதிக்கப்பட வேண்டும், என மனித உரிமைகள் சபையினை திருப்திப்படுத்துவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சி மறுக்கப்பட்ட போது சர்வதேச சமூகமானது இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு பாரிய அடியைக் கொடுத்தது.
இலங்கை அரசாங்கம் மீதான ஆழமான அவநம்பிக்கை, கொலைகள் , வலிந்து காணாமற்போதல்கள், கூட்டான கொலைகள், சித்திரவதைகள் , மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துதல் பற்றிய அவர்களது பொய்களை நிராகரித்து சர்வதேச சமூகமானது இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் உட்பட இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் பற்றிய ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்குமாறு மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அலுவலகத்திற்கு ஆணையிட்டது.
மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அலுவலகமானது அங்குள்ள ஆதாரங்களைச் சேகரித்து ஆய்வுசெய்து இடைவெளிகளை அடையாளங்காண்பதற்கு 18 மாதங்களைக் கொண்ட ஆணையைக் கொண்டுள்ளது.
தமது தகவல்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு அவர்கள் பின்னர் ஆதாரங்களைச் சேகரிப்பார்கள். வேறு சட்ட ஆட்சி எல்லைகளில் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அவர்கள் சேகரிக்கின்ற ஆதாரங்கள் மற்றும் தகவல்களை பயன்படுத்த வேண்டும்.
சர்வதேச சட்ட எல்லையின் கீழ் உங்களுடைய நாட்டில் வழக்குகளைக் கொண்டுவருவதற்கு நீங்கள் அனைவரும் உங்களது அரசாங்கங்கள் மற்றும் போர்க்குற்ற வழக்கறிஞர்களிடம் ஆதரவு தேடுவது அவசியம் என்பதையே இது கருதுகிறது.
உறுப்பு நாடுகள் தாம் போரின் போதும் அதன் பின்னரும் தாம் சேகரித்த ஆதாரங்களை மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அலுவகத்தினை அணுகி அவற்றை வழங்க முடியும்.
அத்துடன் அவ்வாறான ஆதாரங்களை அந்த அலுவலகத்திற்கு கிடைக்ககூடியதாக செய்ய முடியும். அவர்களது போர்க்குற்ற வழக்கறிஞர்கள் தமது சொந்த நாடுகளில் வழக்குகள் மற்றும் ஏனைய பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கு ஆதரவாக ஆதாரங்களை கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் முடியும். நாங்கள் செய்யக்கூடிய இன்னுமொரு பயனுள்ள வேலையாக தடைகள் உள்ளன.
உங்களில் பலர் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள மக்னிட்ஸ்கி தடையை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
வெவ்வேறான அளவுகோலினைக் கொண்ட தடைகள் பல்வேறு நாடுகளிலுள்ளன. அத்துடன் குற்றஞ்செய்தவர்களுக்கு நீதிமன்றங்கள் ஊடாக எம்மால் தண்டனை வழங்கமுடியாது இருத்தல் அதன்பின்னர் பொறுப்புக்கூறலுக்கான ஏனைய வழிகளாக விசாக்களை வடிகட்டி ஆய்வு செய்தல் மற்றும் தடைகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
நீங்கள் அறிந்து கொண்டதைப் போல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கு பயணம் செய்யமுடியாது.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் ஆனது கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் இலங்கைப் போரின் ஆரம்பக்கட்டத்திலும் இறுதிக் கட்டப் போரிலும் அவருடைய வகிபாகத்தை குறிப்பிடும் அவரைப் பற்றிய இரகசிய ஆவணக் கோவையைத் தயாரித்தது.
இந்த ஆவணக்கோவை அமெரிக்க அரசிற்கும் தடைசெய்யும் ஏனைய அமைப்புகளுக்கும் கிடைக்ககூடியதாகச் செய்தோம். அண்மையில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள உலகத் தடைகள் அமைப்பிற்கு அங்கும் சவேந்திர சில்லாவை தடை செய்வதற்கு ஒரு வேண்டுகோளைச் சமர்ப்பித்திருக்கின்றோம்.
இது இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் உங்களுடைய உள்ளூர்ப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது பற்றி எழுதுவது உட்பட பிரிட்டிஸ் அரசாங்கம் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பது அவசியமாகும்.
நீங்கள் வேறு நாடுகளில் வாழ்ந்து வந்தால் நீங்கள் சவேந்திர சில்வாவையும் தடைசெய்யுமாறு கேட்டு உங்களது அரசாங்கங்களுக்கு எழுதமுடியும்.
இது ஒரு ஆரம்பம் மாத்திரமே , மோசமான சர்வதேசக் குற்றங்களைச் செய்த ஏனைய இலங்கைக் குற்றவாளிகளையும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தும் விதமாக ITJP ஆனது தொடர்ந்தும் ஏனைய ஆவணக் கோவைகளையும் தயாரித்து வருகின்றது. இலங்கையில் கொலைகள் உட்பட சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக கண்காணிக்கப்படல் , அச்சுறுத்தப்படுதல், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சாட்சியாளர்கள் தமது உயிருக்கு அஞ்சுதல் என அடக்குமுறை தொடர்கின்றது.
ஆனால் அங்கு நடைபெறும் மீறல்களை ஆவணப்படுத்துவதற்கும் , அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது கவனத்தைச் செலுத்துகின்றோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் நாங்கள் தொடர்ந்தும் நிலைமையை கண்காணிப்பது அவசியமாகும். அதேநேரத்தில் இரகசியம் காத்தல் மற்றும் சாட்சியாளர் பாதுகாப்பு குறித்து மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும்.
இலங்கையினுடைய சட்டமா அதிபராக இருந்தபோது வலிந்து காணாமற்போதல், கொலை, சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தாமல் தவறிழைத்தமையால் மொஹான் பீரிஸை கௌரவமான ஐக்கிய நாடுகளின் சர்வதேச சட்ட ஆணையகத்திற்கு நியமிப்பதை தடுக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு ITJP அழைப்புவிடுத்திருக்கிறது.
இது தொடர்பான நடவடிக்கை தொடர்பில், இவரது நியமனம் பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்துவதாகவும் சட்ட ஆட்சி மீதான தாக்குதலாகவும் இருக்கும் என்பதால் இது இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு உங்களுடைய அரசாங்கங்களுக்கு நீங்கள் அனைவரும் அழுத்தம் கொடுப்பது அவசியமாகும்.
நீதி தேடுவதையும் பொறுப்புக்கூறலையும் நாம் ஒருபோதும் மறக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் அனைவரும் எமது சொந்த வழிகளில் ஆக்கங்கொண்டவர்களாகவும் துணிவு கொண்டவர்களாகவும் இருப்பது அவசியமாகும்.
12 வருடங்களுக்கு முன்னர் சுதந்திரத்திற்கான தேடுதலில் உயிரிழந்தவர்களின் இழப்பு வீண் போகமல் இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்துவதற்கான ஒரே வழி இதுவாகும்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
