இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜப்பான் பிரதமர்
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுடில்லியில் நடைபெறவுள்ள ஜி. 20வது அரச தலைவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ஜப்பானிய பிரதமர் இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்கால முதலீட்டு திட்டமிடல்
இலங்கையின் முக்கிய அபிவிருத்தி உதவி பங்காளிகளில் ஒருவரான ஜப்பானிய தலைவர், நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக மேலும் தெரியவருகிறது.
இந்நிலையில் இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு இன்று(02.09.2023) இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
