மனித உரிமைகள் விடயத்தில் இலங்கைக்கு ஜப்பான் ஆதரவு
மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கையின் சொந்த முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என்று, ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில், நேற்று(03.03.2025) கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கம், தேசிய நல்லிணக்கத்தை நோக்கி எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆதரவு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதன் மூலம் உள்நாட்டு பொறிமுறையில் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், மனித உரிமைகள் நிலைமையை, உறுதியான முறையில் மேம்படுத்துவதற்கும், தேசிய நல்லிணக்கத்துக்கு பங்களிக்கும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதற்கும், இலங்கை மேற்கொள்ளும் சொந்த முயற்சிகளை தொடர்ந்து ஆதரிப்பதாக, ஜப்பான் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |