ஜப்பானிய பொதுதேர்தல்: பெரும்பான்மையை இழந்த ஆளும் கட்சி
ஜப்பானின் (Japan) 2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஆளும் கட்சி உட்பட எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை என சர்வதேச செய்திகள் கூறியுள்ளன.
ஜப்பானின் பொதுத் தேர்தலானது, நேற்றைய தினம் (27) இடம்பெற்றது.
இதற்கமைய, பொதுத்தேர்தலில் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளதுடன் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை இழந்துள்ளது.
கூட்டாட்சி
இது, பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கூட்டாட்சி அமைப்பதற்காக வெளியே பிற கட்சிகளின் ஆதரவை கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானிய நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க தேவையான 465 இடங்களில் ஒரு கட்சி 233 இடங்களை பெறுவதன் மூலமே பெரும்பான்மை பெற முடியும் இருப்பினும், லிபரல் ஜனநாயகக் கூட்டணி 215 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையிலேயே, தற்போது கூட்டாட்சி அமைப்பதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவு கோரப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
