அரச தரப்புடன் கலந்துரையாடிய கொழும்பு போர்ட் சிட்டி நிறுவனம்
ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் (port city colombo private limited ) முகாமைத்துவ பணிப்பாளர் சியோங் ஹொங்பெங் (xiong Hongfeng) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது, இன்று (28) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
புதிய திட்டங்கள்
இதன்போது, கொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும், எதிர்கால பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கான புதிய திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனத்தினால் மூன்று மில்லியன் ரூபா நன்கொடையும் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த நிறுவனத்தின் உதவி முகாமைத்துவப் பணிப்பாளர் சியன் நன்னும் (Xian Nan(Neo) இந்த சந்திப்பில் இணைந்து கொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri