சர்வதேச சந்தையில் குறைந்துள்ள தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.
அதன்படி உலக சந்தையில் இன்று (28) தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 2,733.33 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,747.59 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.
இலங்கையின் தங்க நிலவரம்
மேலும், இலங்கை சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 804,659 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 24 கரட் தங்கம் 1 கிராமின் விலை 28,390 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை 26,030 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் 1 கிராமின் விலை 24,850 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது, 227,100 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 208,200 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 198,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri