மீண்டும் வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(28.10. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.11 ரூபாவாகவும், கொள்வனவு விலை 289.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 215.89 ரூபாவாகவும், கொள்வனவு விலை 206.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 323.32 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 310.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 387.65 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 373.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 8 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
