இலங்கைக்கு மேலும் நன்கொடையாக கிடைக்கும் பெருந்தொகை டொலர்
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு மற்றுமொரு நிவாரண பொதியாக 1.8 மில்லியன் டொலரை ஜப்பான் வழங்கியுள்ளது.
நாட்டில் வறுமை நிலையிலுள்ள சிறுவர்களின் நன்மை கருதி, யுனிசெப் நிறுவனத்தின் ஊடக ஜப்பான் இந்த உதவியை வழங்கியுள்ளது.
இதன்மூலம் 6 இலட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு சுத்தமான நீர், சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையில், மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் ஆரம்பமான பொருளாதார நெருக்கடியின் முதற்கட்டத்திலிருந்து, இதுவரை 3.8 மில்லியன் டொலருக்கும் அதிகமான நன்கொடைகளை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.