நெருக்கமாகும் இந்திய -இலங்கை நட்பு! சந்தித்துக்கொண்ட ஜெய்சங்கர்- பீரிஸ்!
நட்பு நெருக்கமாகிறது
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை, நேற்று வியாழக்கிழமை ருவாண்டாவில் வைத்து இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சந்தித்தார்.
இதன்போது நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, இந்தியாவின் முக்கிய ஆதரவு குறித்து அவர் கலந்துரையாடினார்.
ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு புறம்பாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்புக்கு வந்த இந்திய குழு
இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா தலைமையிலான நான்கு பேர் கொண்ட தூதுக்குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து உறுதியளித்த சில மணித்தியாலங்களில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், ஜி.எல். பீரிஸுடன், இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவைப் பற்றி பேசியதாக ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
2022 ஜூன் 21 முதல் 25 வரை ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பதிலாக ஜி.எல்.பீரிஸ் கலந்து கொள்கிறார்.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 18 மணி நேரம் முன்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஸ்ரீலீலா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. ஷார்ட் உடையில் பார்பி போல வந்த வீடியோ Cineulagam