வெளிநாட்டு மோகத்தால் பல இலட்சங்களை இழந்த யாழ்.இளைஞர்கள்
வெளிநாட்டுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் நீர்கொழும்பிலுள்ள முகவரொருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துபோன சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக இணையவழியூடாக பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வடமராட்சி குடத்தனையைச் சேர்ந்த த.தர்மதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்
”வெளிநாட்டுக்கு செல்வதற்காக முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நீர்கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியிலுள்ள முகவரிடம் 56 இலட்சம் ரூபா பணத்தை வழங்கினோம்.
பல தடவைகள் நாம் கொழும்புக்கு சென்றபோதும் எம்மை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் முகவர்கள் அலைக்கழித்தனர்.
கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது எம்மை
அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர். ஆகவே பணத்தை மீட்டுத்தர உதவவேண்டும்” என்றார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
