யாழில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வு! அழைப்பு விடுக்கவில்லையென சுமந்திரன் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்விற்கு தங்களுக்கான அழைப்பு வரவில்லை என்று இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று(16-01-2026) கிளிநொச்சி நீதிமன்றத்தில் கிராம அலுவலர் ஒருவரைத் தாக்கியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கு எதிராக நடைபெற்ற வழக்கு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வு
தவிசாளர்கள் மாத்திரமே அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

நேற்று ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுக்கு அரசாங்கம் அழைக்கவில்லை பதவியில் உள்ள தவிசாளர்களுக்கு அழைப்பு வந்ததாக அறிகின்றோம்.
தவிசாளர்கள் அதிலே பங்கு கொள்வதில்லை என தீர்மானித்தார்கள் அதற்கு அமைய அவர்களும் கலந்து கொள்ளவில்லை அது கட்சியின் தீர்மானமாகும் எனவும் அதன் மேலும் தெரிவித்துள்ளார்.