நாடளாவிய ரீதியில் இடம்பெறும் பெரிய வெள்ளியின் தவக்கால கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு (Photos)
கிறிஸ்தவ மக்கள் தமது பெரிய வெள்ளியின் தவக்கால கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு இன்று நாடளாவிய ரீதியில் பல கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
கொழும்பு
கொழும்பு - புதுக்கடை நல்மரண மாதா ஆலயத்தில் பெரிய வெள்ளியின் தவக்கால கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.
பெரிய வெள்ளி கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு பெருந்திரளான மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம்
கிறிஸ்தவ மக்கள் தமது பெரிய வெள்ளியின் தவக்கால கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.
இவ் பெரிய வெள்ளி கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க நாவாந்துறை சென் நீக்கிலஸ் தேவாலயத்தில் மிகச்சிறப்பாக தவக்கால சிலுவைப்பாதையின் கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.
இவ் கூட்டுத்திருப்பலியினை பங்குமுதல்வர் அருட்பணி யேசுரட்ணம் அடிகளார்கள் தலைமையிலான அருட்சகோதர்கள் நடத்திவைத்துள்ளனர்.
இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தவக்கால வாரம் கடந்த 18.03 அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 17.04 அன்று உயிர்த்தஞாயிறு பெரும் கூட்டுத்திருப்பலியுடன் இனிதே நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா
வவுனியா கோமரசன்குளம் கல்வாரி திருத்தலத்தில் பெரியவெள்ளி தவக்கால திருச்சிலுவைப்பாதை இன்று கோமரசன்குளம் பங்குத்தந்தை அருட்பணி றொசான் தலைமையில் இடம்பெற்றது.
வவுனியா கோமரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள கல்வாரி திருத்தலத்தில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் திருச்சிலுவைப்பாதை பங்கு மக்களின் பங்குபற்றுதலில் இடம்பெற்றது.
அருட்பணியாளர்கள் மற்றும் அருட்சகோதரிகள் , அப்பகுதி மக்கள் எனப்பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
