யாழ். வல்லிபுர ஆழ்வார் ஆலய நரகாசுர சங்காரம்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தீபாவளி சிறப்பு பூசைகள் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் சுதர்சனக்குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் தலைமையில் நேற்று (31) நடைபெற்றது.
காலை 6:45. மணியளவில் உற்சவகால பூசைகளுடன் ஆரம்பமான பூசைகளில் 8:30 மணிக்கு அபிசேகமும், முதலாம் கால பூசை 9:30 மணிக்கும், நண்பகல் 12:00 மணிக்கு உச்சிக்கால பூசையும் இடம் பெற்று பிற்பகல் 3:45 மணியளவில் அவல் பூசையும், 4:15 மணிக்கு இரண்டாம் கால பூசையும், இடம்பெற்றது.
அடியவர்கள் வருகை
அதனை தொடர்ந்து 5:00 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்திலிருந்து பிள்ளையார், தனலக்ஸ்மி முன்னேவர சுதர்சன சக்கரத்து ஆழ்வார் ஆலய உள்வீதி உலாவந்து வெளி வீதியில் நரகாசுர சங்காரம் இடம்பெற்றது.
இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அடியவர்கள் வருகை தந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




