யாழ்ப்பாணம் - வடமராட்சி மூத்த விநாயகர் தேர்த் திருவிழா
யாழ்ப்பாணம் - வடமராட்சி மூத்த விநாயகர் ஆலய வருடாந்தத் தேர் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.
குறித்தத் திருவிழாவானது நேற்றைய தினம்(28.07.2026) வெரு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.
தேர் திருவிழா
அதிகாலை முதல் சிவாச்சாரியார்கள் ஓமம் வளர்த்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் நடைப்பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து மூத்த விநாயகர் தேரில் வலம் வந்தார். இதில் வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திகளை நிறைவேற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரி பூவற்கரை பிள்ளையார் தேர்
யாழ்ப்பாணம் - வடமராட்சி, வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவின் ஒன்பதாம் திருவிழாவாகிய தேர் திருவிழா நேற்று(28.07.2026) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
அதி காலை முதல் சிவ அமிர்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஓமம் வளர்த்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றுள்ளன.

அதனைத் தொடர்ந்து லட்சுமி, முருகப்பெருமான் முன்னே செல்ல பூவக்கரை பிள்ளையார் பின்னாலே பெரும் தேரில் வலம் வந்தார்.
இதில் வதிரி பிரதேசத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திகளை நிறைவேற்றியுள்ளனர்.
தமிழ்நாட்டில் இல்லை.. முக்கிய இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜனநாயகன்.. வசூல் வேட்டை Cineulagam
ஒரே சீரியலில் நடித்து காதலித்து திருமணம் செய்துகொண்ட 5 ஜோடிகள்.. யார்யாரெல்லாம் என்று பாருங்க Cineulagam