யாழ். போதனா வைத்தியசாலை வெற்றிடத்திற்கான ஆளணிகள் தேவை: சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டு
யாழ். போதனா வைத்தியசாலையினை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு வெற்றிடத்திற்கான ஆளணிகள் தேவைப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்(Jaffna) போதனா வைத்தியசாலையில் நேற்று (04.06.2024) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை கூறியுள்ளார்.
வெற்றிடத்திற்கான ஆளணிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் 04 ஆவது தேசிய வைத்தியசாலையாக யாழ். போதனா வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவதாக தெரிவிக்கபட்டிருந்த போதிலும் அதன் தேவைகள் மற்றும் நிலைப்பாடு பற்றி சுகாதார அமைச்சிடம் அறிவித்திருக்கின்றோம்.
1350 படுக்கைகளுடனான விடுதியும் 325 வைத்தியர்களும், 680 தாதியர்களுமாக மொத்தமாக 2,150 நபர்கள் கடமை புரிந்து வருகின்றனர்.

தேசிய வைத்தியசாலையாக்குவதற்கு 200 மேலதிக தாதியர்கள் ஆளணியும், 100 வைத்தியர்கள் ஆளணியும் தேவையாகயுள்ளது.
இவ்வாறு அதிகரிப்பு செய்யப்படும் போது தேசிய வைத்தியசாலையாக மாற்ற சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் பங்களிப்பு
யாழ். போதனா வைத்தியசாலையில் 320 வைத்திய நிபுணர்கள் சேவையாற்றி வருகின்றனர்.
வைத்திய வெற்றிடங்கள் நிரப்பட்டுள்ள போதிலும் மேலும் சில நிபுணர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றன.

அத்துடன், சிறப்பு பிரிவுகளுக்கு குறைந்தது நூறு வைத்தியர்கள் தேவையாகயுள்ளது.
இருதய சிகிச்சைப்பிரிவு, இருதய சத்திர சிகிச்சைப்பிரிவு போன்ற வைத்திய துறைக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது.

இந்நிலையில், அதற்கான ஆளனி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய சுகாதார அமைச்சு முழுமையான பங்களிப்பினை வழங்கவேண்டும் ”என அவர் தெரிவித்துள்ளார்.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri